மாதுளம் பழ தோல் டீ
மாதுளம் பழத்தின் தோலைத் தூக்கி எறியாமல், அதை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆரோக்கியமான மாதுளம் பழ தோல் டீ தயார். இதில், பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளதால், நீண்ட கால கால் வலி, மூட்டு வலி மற்றும் இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் டானின்கள் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. LDL கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உணவு உண்ட பின் பால் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதற்குப் பதிலாக இந்த டீயைக் குடித்தால் செரிமானம் மேம்படும்.
வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!
மேலும், சாப்பிட்ட பின் இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமமும் நல்ல பொலிவு பெறும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

