Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!
    கோவை

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-police-arrest-two-for-instagram-sextortion
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் அப்பாவி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு நாடகம் ஆடி, வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக படம் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் கேட்ட இரண்டு வாலிபர்களை கோவில்பாளையம் போலீசார் 24 மணி நேரத்துக்குள் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    கோவில்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் சேலம் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தினார். இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்ட அருணாச்சலம், மாணவியிடம் உதவி செய்யும் நல்லவன் போல் நடித்து அவரது நம்பிக்கையை பெற்றார்.

    மாணவி தனது நகையை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டபோது, அருணாச்சலம் 60 ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்து, அதில் மட்டும் 30 ஆயிரம் ரூபாயை மாணவியிடம் கொடுத்தார். பின்னர், “நான் பைக் வாங்கினேன், டியூ தொகை கட்டவில்லை, பைனான்ஸ் மேனேஜர் 30 ஆயிரம் வாங்கிக் கொண்டார்” என்று புதிய பொய்க் கதை சொன்னார்.

    சந்தேகம் வந்தால் பேசுவதற்கு தனது நண்பன் சந்தோஷ் (கட்டிட வேலை செய்பவர்) செல் நம்பரை “மேனேஜர் நம்பர்” என்று அனுப்பி வைத்தார்.
    மார்ச் மாதம் தொடங்கிய இந்த உரையாடல் நாளுக்கு நாள் நெருக்கமான நட்பாக மாறியது. இருவரும் மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசி, ஆசை வலையில் வீழ்த்தினர்.

    வாட்ஸ்அப் வீடியோ காலில் அடிக்கடி பேசி நம்பிக்கையை அதிகரித்தனர். இறுதியில் “உன்னை ஆடையின்றி பார்க்கணும்” எனக் கூறி, நிர்வாண வீடியோ காலுக்கு அழைத்து, மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரகசியமாக பதிவு செய்தனர். பின்னர் அந்த தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மாணவியிடம் பணம் கோரினர்.

    இந்த மிரட்டலில் சிக்கிய மாணவி மனமுடைந்து, தற்கொலை எண்ணத்துடன் சோர்வாக இருந்தார். மாணவியின் மனநிலையைக் கண்ட விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண்மணி விசாரித்தபோது, மாணவி கதறி அழுதபடி முழு சம்பவத்தையும் ஒவ்வொன்றாகச் சொன்னார். உடனடியாக அந்தப் பெண்மணி நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு கோவில்பாளையம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தனிப்படையுடன் உடனடியாக சேலம் அருகே மேச்சேரிக்கு சென்று அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் 24 மணி நேரத்துக்குள் கைது செய்தார்.விசாரணையில் இருவரும் மாணவியின் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது உறுதியானது.

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!


    கோவில்பாளையம் போலீசார் இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.“சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதவர்களுடன் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். அப்பாவியாக பேசும் பெண்கள் இப்படி சிக்குவது அடிக்கடி நடக்கிறது.

    மிகுந்த ஜாக்கிரதையுடனும், கவனத்துடனும் பழகுங்கள்” என போலீசார் இளம் பெண்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.ஒரு அப்பாவி மாணவியின் எதிர்காலத்தை சீரழிக்க முயன்ற இந்த இரு வாலிபர்களை என்னவென்று சொல்வது? இளம் பெண்கள் இணைய உலகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது.

    Coimbatore Cyber Crime News 2026 Coimbatore Instagram Sextortion Arrest College Girl Video Leak Threat Kovilpalayam Local News Updates Kovilpalayam Police Action Salem Social Media Trap Women Safety WhatsApp Video Call Scam India கல்லூரி மாணவி சைபர் க்ரைம் புகார் கோவில்பாளையம் போலீஸ் அதிரடி கைது கோவை இன்ஸ்டாகிராம் வீடியோ மிரட்டல் கோவை மாவட்ட குற்றச்செய்திகள் 2026 சமூக வலைதள பெண் பாதுகாப்பு சேலம் மேச்சேரி அருணாச்சலம் சந்தோஷ் வாட்ஸ்அப் வீடியோ கால் மோசடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.