சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆயிஷா அப்துல்லா என்பவர் சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரில் தனக்கு அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூட கூசும் அளவிற்கு மிகவும் ஆபாசமான வக்கிரமான வார்த்தைகளை பயன்படுத்தி யூடியூபர் முக்தர் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மிகவும் தரை குறைவாக விமர்சித்தது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார்.
மேலும், நான் மட்டும் மன வலிமையோடு இல்லை என்றால், உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பேன். என் பெற்றோர் என் கணவரின் ஆதரவால், நான் உறுதியாக இருக்கிறேன். வேறு ஏதேனும் குடும்பமாக இருந்தால், விவாகரத்து வரை இந்த விவகாரம் சென்றிருக்கும். ஒரு பெண்ணாகவும், சர்வதேச அளவில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீராங்கனையாகவும் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாக இருக்கும் தன்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனிப்பட்ட முறையில் ஆபாச சேற்றை முக்தர் வாரி இறைத்துள்ளார்.
விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!
ஒட்டுமொத்த பெண்களின் மாண்பையும் இவர்கள் சிதைக்கிறார்கள். இவர்களின் அசிங்கமான பேச்சால் மன உளைச்சல் ஆளாவதாக அலிஷா அப்துல்லா புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருந்தார்.
அலிஷா அப்துல்லா கொடுத்து புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீஸ் கைதுக்கு பயந்து யூடியூபர் முக்தர் கர்நாடகாவில் தலைமுறைவாக இருந்த நிலையில், தீவிரமாக தேடி வந்த போலீசார் சென்னை சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் முக்தர் ஒளிந்து இருப்பதை உறுதிப்படுத்தி அவரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

