தமிழக வெற்றிக்கழகத்தில் அமைச்சர் செங்கோட்டையனை தவிர்த்து பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சராக இருக்கிறார்கள். அவர்களது செயல்பாடு அதிகம் விமர்சனத்தையே சந்திக்கின்றன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அழைப்பை ரீல்ஸ் மூலம் விடுவித்து பெரிய அதிர்ச்சியை சம்பாதித்தது.
அதேபோல், அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் சில வாரங்களுக்கு முன்பு கோவில்களில் ஆய்வு நடத்தினார் அப்போது தின்பண்டங்களின் தரம் குறித்து பேசு இருந்தால், அது கிண்டலுக்கு ஆளானது. அடுத்ததாக, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவரிடமே 4000 ரூபாய் அர்ச்சகர்கள் லஞ்சமாக பெற்றார்கள்.
ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த கடலூர் சிங்கம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி..!
அதையடுத்து அவர்களிடம் விளக்க கடிதம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பணம் வாங்கிய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி, இளைஞர்களின் செயல்பாட்டில் சில தடுமாற்றங்கள் இருப்பதாகவும், அதேசமயம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களின் நிலைப்பாடாகவே இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜயின் நண்பரும் நடிகருமான மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசுகையில், அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதினும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது என்று பேசி இருந்தார்.
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு அவரிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ எந்த விஷயத்திற்கு பேச வேண்டுமே, அதைவிடுத்து விட்டு மற்ற இடங்களில் எல்லாம் நன்றாக பேசுகிறார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

