தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரிக்கும் கட்சிகள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில், அமமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ காமராஜர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.
அதில், நேற்றே கூறிவிட்டேன். நேற்று, இன்று, நாளை என ஐந்தாண்டு காலம் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிப்பேன். தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் முதலமைச்சர் என்னையும் காப்பாற்றுவார். முதலமைச்சர் ஆட்சி பெற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது.
அதற்குள் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரணடைந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடத்தல் கார்கள் கஞ்சா விற்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

