தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரின் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது அரசியல் நாகரீகம் என்று பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், இன்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து பெறுகிறார்.
அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அவரை அலுவலக வாயில் முன்பு வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தினிடம் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனுக்கும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் செல்ல உள்ளார்.

