Browsing: முதல்வர் விஜய் சந்திப்பு
“முதலமைச்சர் விஜய்யை முகத்தை மூடிக்கொண்டு சந்திக்கச் சென்ற அந்த மர்ம நபர் யார்?” – தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது அரசியல் நகர்வா என விவாதங்கள் கிளம்பியுள்ளன.
முதலமைச்சர் விஜய் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்; சிறுபான்மையினர் நலன் குறித்த கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
