சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.
முதலமைச்சர் விஜய்யிடம் பிரேமலதா வைத்த முக்கிய கோரிக்கைகள்..!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 17வது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எனது முதல் உரை இது. இவ்வேளையில், எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு சட்டசபையில் எதிரிக்கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும்.
நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்கசக்தி தான். முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் இல்லத்திற்கு அரசியல் கட்சி தலைவர் இல்லத்திற்கும் வாழ்த்துக்களை பெற்றுள்ளார். அந்த அரசியல் நாகரீகம் சட்டசபை பேரவையில் தொடர வேண்டும் என்பது எங்களுடைய எண்ணமும் எதிர்பார்ப்பும் முதலமைச்சர் விஜயும் நானும் ஒரே காலேஜில் தான் படித்தவர்கள்.
ஆனால், அரசை நடத்துவதில் திமுக தான் சீனியர். அந்த அடிப்படையில், எங்களுக்கு அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள் என்று திமுக அரசுக்கு அவர் கூறியுள்ளார். மேலும், நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களின் நலனை முக்கியம்.
சபாநாயகர் எங்கள் இரு தரப்பையும் கையை பிடித்து அரவணைத்து செல்ல வேண்டும். அவை தலைவரை கோபப்படுத்தும் வகையில், நாங்கள் செயல்பட மாட்டோம். சட்டமன்றத்தில், ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சிகள் குரலாகவும் இருக்க வேண்டும். அதனால், அதில்தான் இந்த அவையின் பெருமை அமைந்துள்ளது.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பதவி ஏற்பு விழாவில் நடந்த தவறு இனி நடக்கக்கூடாது. வெல்க தமிழ் வாழ்க தமிழ்நாடு மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசி இருந்தார்.

