தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.
இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.
பின்னர், முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஜே சி பி பிரபாகரன் பேசினார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் முதலமைச்சர் விஜயை பாராட்டி பேசியுள்ளார். அதாவது, காமராஜரை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்றது போல, திமுக தலைவர், மதிமுக பொதுச்செயலாளர், திராவிட கழக தலைவர் பாமக தலைவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை முதலமைச்சர் விஜய் பாதுகாத்து வருகிறார். மூன்று முக்கிய கோப்புகளை கையொப்பமிட்டு, ஆரம்பமே அமர்க்களப்படுத்தி உள்ளார் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

