நடிகை ஸ்ருதிஹாசன் டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தனது முகம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ரூ.15 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். சமீபகாலமாக இணையத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலமானவர்களின் முகத்தை ஆபாசமான அல்லது தவறான காணொளிகளில் பொருத்துவது அதிகரித்து வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஸ்ருதிஹாசனும் இலக்காகியுள்ளார். தனது பிம்பத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இத்தகைய செயல்களை ஸ்ருதிஹாசன் கடுமையாக எதிர்த்துள்ளார். தனது அனுமதி இன்றி AI தொழில்நுட்பத்தில் தன்னைச் சித்தரிக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக அவர் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..
தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்ததற்காகவும், தார்மீக ரீதியாகத் தான் சந்தித்த பாதிப்புகளுக்காகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ரூ.15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் என்பதே ஸ்ருதிஹாசனின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

