நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
மலைப்பாதையில் சிக்கிய கடத்தல் கும்பல்.. சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது..!
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் பொறுப்பேற்று பின்னர், சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிப்பேன் எனவும், கவர்னர் விஜய்யிடம் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிகிறது. விஜயின் சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவர்னரை இன்று சந்திக்க இருக்கின்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளார் அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு டி.ஜி.பி. சந்தீப் ராய் ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் பதவியை சட்ட ஒழுங்கு பிரச்சினை ஆகி குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

