வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல், பிரத்யேகமாக வறுத்து அரைத்த மசாலா பொடியைக் கொண்டு பாரம்பரிய முறையில் செய்யப்படும் ஒரு சாத்விக உணவு தான் இந்த ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு. சாதத்துடன் பிசைந்து சாப்பிட அலாதியான சுவையைத் தரும்.
தேவையான பொருட்கள்
- காய்கறிகள்: கத்தரிக்காய், வெண்டைக்காய் (அல்லது பூசணிக்காய்) – நறுக்கியது
- புளி: ஒரு நெல்லிக்காய் அளவு (கரைத்து வடிகட்டியது)
- நல்லெண்ணெய்: 5 மேஜைக்கரண்டி
- மசாலா வறுத்து அரைக்க: மல்லி விதை (1 டேபிள் ஸ்பூன்), வெந்தயம் (1 டீஸ்பூன்), துவரம் பருப்பு (1 டேபிள் ஸ்பூன்), உளுத்தம் பருப்பு (1 டீஸ்பூன்), வரமிளகாய் (5).
- தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், வரமிளகாய், கறிவேப்பிலை.
- இதர: உப்பு (தேவையான அளவு), வெல்லம் (1 சிறிய துண்டு).
செய்முறை
Step 1: ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வறுக்கக் கொடுத்துள்ள மல்லி விதை, வெந்தயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாயைப் பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
Step 2: அதே கடாயில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காயைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாகச் சுருள வதக்க வேண்டும்.
Step 3: வதக்கிய காய்கறிகளுடன் புளித் தண்ணீரை ஊற்றவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்கள் (எண்ணெய் பிரிந்து வரும் வரை) கொதிக்க விடவும்.
5 நிமிடத்தில் காலை உணவு.. உதிரி உதிரியாக ‘ஹோட்டல் ஸ்டைல்’ ஜவ்வரிசி கிச்சடி..!
Step 4: வேறொரு தாளிப்பு கரண்டியில் மீதமுள்ள நல்லெண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குழம்பில் கொட்டிக் கிளறி இறக்கினால் மணக்க மணக்க ஐயங்கார் புளிக் குழம்பு தயார்.
ஐயங்கார் புளிக் குழம்பிற்கு நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுதான் இதன் பாரம்பரிய மணத்தையும் சுவையையும் தூக்கலாகக் காட்டும். இறுதியாகச் சேர்க்கும் சிறிய துண்டு வெல்லம் புளியின் புளிப்புத் தன்மையைச் சமன் செய்யும்.

