Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!
    கோவை

    4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Idhayangal Foundation 9th Anniversary Coimbatore Event
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டைப் 1 சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து களப்பணியாற்றி வரும் இதயங்கள் அறக்கட்டளையின் 9வது ஆண்டு விழா, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

    இந்த நிகழ்வில், அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகள், அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

    அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில்,

    டைப் 1 சர்க்கரை நோயால் உயிரிழப்பு அபாயத்தில் இருந்த குழந்தைகள் கூட, சரியான மற்றும் நேர்மையான சிகிச்சையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை தொடர்ந்து வருகின்றனர். சிலர் தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வருமானமும் ஈட்ட ஆரம்பித்துள்ளனர்.

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 4000- க்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்து வருகிறோம். உயர்தர இன்சுலின் , சர்க்கரை பார்க்கும் சாதனம், குளுக்கோஸ் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் இன்சுலின் பம்ப் போன்ற அதிநவீன மருத்துவம் அனைத்து ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்கிறது.

    இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் எங்கள் சேவை தொடர்கிறது. தற்போது 10 மாவட்டங்களில் சர்க்கரை நோய் சிகிச்சை மையங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும், வரும் ஆண்டில் மதுரை, சேலம், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இந்த மையங்களில் உள்ள உயர்தர மருத்துவ கருவிகளின் உதவியால், ஒரு சொட்டு ரத்தத்திலேயே கிட்னி, தைராய்டு, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிய முடிகிறது, என்றார்.

    விழாவின் ஒரு பகுதியாக, டைப் 1 சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வெற்றிகரமாக முன்னேறி வரும் குழந்தைகள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து மீண்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    Coimbatore News Dr. Krishnan Swaminathan Idhayangal Foundation Insulin Pump Kikani School Medical Service Type 1 Diabetes இதயங்கள் அறக்கட்டளை இன்சுலின் பம்ப் கோவை செய்திகள் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் டைப் 1 சர்க்கரை நோய் மருத்துவச் சேவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    ரீல்ஸ் எடுக்கவா ‘சிங்கப்பெண்’ பிரிவு?.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடி சாடல்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.