Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!
    கோவை

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    election-ban-velliangiri-hills-kovai-kutralam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல நாளை தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அத்துடன் தேர்தலில் 100% வாக்குப் பதிவை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அது போன்று வாக்குப் பதிவின் போது பிரச்சனை நடப்பதை தடுக்க உள்ளூர் போலீசார் உடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    நாளை வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் ஓட்டு போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு இடையே தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது போன்று பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது

    சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை, அதே போன்று வெள்ளியங்கிரி மலைக்கு இன்று புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல அனுமதி இல்லை
    நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம்.

    இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தடை மீறி கோவை குற்றாலம் அருவிக்கும், வெள்ளியங்கிரி மலைக்கும் செல்வதை தடுக்க வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!


    தடையை மீறும் நபர்கள் மீது இந்திய வனச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் தடை செய்யப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். அதுபோன்று கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    Coimbatore Election Ban Coimbatore Forest Department Election Day Rules Coimbatore Kovai Kutralam Entry Ban TN Assembly Election 2026 Velliangiri Hills Closed Velliangiri Temple Access கோவை குற்றாலம் தடை கோவை செய்திகள் சட்டமன்றத் தேர்தல் 2026 சுற்றுலாத் தலங்கள் மூடல் தேர்தல் விடுமுறை கோவை வனத்துறை அறிவிப்பு வெள்ளியங்கிரி மலை பயணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.