Browsing: TN Assembly Election 2026

தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மே 7-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் செல்ல வனத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. இதன் முழு விவரங்கள் இங்கே.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தவெக மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸின் வாக்கு வங்கி தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

காரைக்குடி பிரச்சாரத்திற்குச் சென்ற தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை உறுதியாகியுள்ளது.

திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்குச் சொந்தமான இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது; தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த வாரத்தில் படம் திரைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.