பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயல் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை என்று கூறிய அவர், பிரதமர் மோடியைப் போல பூஜை செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தத்தான் அவர்கள் உரித்தானவர்கள், முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்காமல் சட்ட மசோதாக்களைக் கொண்டுவருவது சரியானதல்ல என்று குற்றம் சாட்டினார்.
அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பிறகுதான் இத்தகைய மசோதாக்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய தேஜஸ்வி யாதவ், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது அனைத்துச் சாதிப் பிரிவினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், இந்த உண்மைகளை மறைத்ததால்தான் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறாமல் போனது என்றும் தெரிவித்தார்.

