Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!
    சமையல்

    காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026Updated:March 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Poondu milagu sadam recipe UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே, தங்களது குழந்தைகளுக்கு லஞ்சுக்கு என்ன செய்து கொடுப்பது என்பது தான். குழந்தைகளுக்கு பொதுவாக மதிய உணவுக்காக கொடுப்பது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதமாக தான் இருக்கும். இதற்கான காரணம், செய்வதில் உள்ள எளிமையும் அதன் சுவையும் தான்.

    ஒரே மாதிரியான சாதத்தை எத்தனை நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது பெரியவர்களை விட குழந்தைகளின் உணவு விஷயத்தில் இது சளிப்படைய வைத்து விடும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சுவையான மற்றும் சத்தான சாதகங்களை செய்து கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான பதிவு. அப்படி ஒரு சாதம் தான் பூண்டு மிளகு சாதம். ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். மீண்டும் மீண்டும் இதை செய்ய சொல்லி குழந்தைகள் உங்களை கேட்பார்கள்.

    Poondu milagu sadam recipe UTV

    தேவையான பொருட்கள்

    • சமைத்த சாதம் ஒரு கப்
    • சமையல் எண்ணெய் மூன்று டீஸ்பூன்
    • கடுகு ஒரு டீஸ்பூன்
    • சோம்பு ஒரு டீஸ்பூன்
    • காய்ந்த மிளகாய் இரண்டு
    • கருவேப்பிலை ஒரு கொத்து
    • முந்திரி பருப்பு இரண்டு ஸ்பூன்
    • பூண்டு 15 பல்
    • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
    • பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
    • மஞ்சத்தூள் கால் டீஸ்பூன்
    • மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
    • பெருங்காயம் ஒரு சிட்டிகை
    • மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
    • தேவையான அளவு உப்பு

    செய்முறை

    Step 1: ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக ஊற வைத்து வேக வைத்து தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாதத்திற்கு எந்த அரிசியை வேணாலும் பயன்படுத்தலாம். ஆனால், பாஸ்மதி அரிசியாக இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    Step 2: சாதத்தை வேக வைத்து தனியாக எடுத்துக் கொடுத்துக் கொள்ளவும். முதலில், ஒரு வட சட்டியை நன்றாக சூடாக்கி அதில், மூன்று டீஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில், ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து அவை வெடிக்க தொடங்கும் வரை பொரிய விடவும். கடுகு பொரிந்த உடன் சோம்பை சேர்க்கவும்.

    Poondu milagu sadam recipe UTV

    Step 3: அதன் பின் இரண்டு வரமிளகாயை உடைத்து சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர், ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கலரவும். அதனை தொடர்ந்து, 2 டீஸ்பூன் உடைத்த முந்திரி பருப்பை சேர்த்து அவை பொன்னிறமாக வரும் வரை வதக்கி விடவும். கூடவே 15 பல் பூண்டுகளை சேர்த்து அவற்றை நன்றாக கிளறவும்.

    Step 4: பூண்டிலிருந்து நறுமணம் வெளிப்பட்டு, அதை லேசாக பொன்னிறமாகும் வரை வேக விடவும். இதனுடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக கிளறவும். பின் நறுக்கிய ஒரு தக்காளி, வெங்காய கலவையுடன் சேர்த்து அவை நன்கு கலக்கும் படி கிளறவும்.

    Step 5: தக்காளி மென்மையாகி வெங்காயத்துடன் முழுமையாக ஒன்றிணையும் வரை ஒவ்வொன்றாக வேகவிடவும். கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வெங்காய கலவையுடன் நன்கு கிளறவும்.

    Step 6: கடாயில் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து மசாலா முழுமையாக வேகம் வரை காத்திருக்கவும். கலவை முழுமையாக வெந்த பிறகு அதனுடன் சமைத்த சாதத்தை சேர்க்கவும். சாதத்தின் மேல் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை தூவி நன்றாக கிளறி விடவும்.

    Step 7: சாதம் உடையாமல் கலவையுடன் முழுமையாக ஒன்றிணையும் வரை மெதுவாக கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.

    easy lunch recipe South India garlic pepper rice Tamil healthy rice recipe Tamil milagu sadam benefits Poondu milagu sadam recipe Tamil cooking recipes பூண்டு மிளகு சாதம் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.