வழக்கமான மல்லிகைப்பூ போன்ற இட்லிகளில் இருந்து மாறுபட்டு, காரசாரமான மிளகு, சீரகம் மற்றும் மணமூட்டும் மசாலாக்களுடன் தயாராகும் காஞ்சிபுரம் இட்லி அனைவரையும் ஈர்க்கக்கூடியது. சாதாரண இட்லி போல இல்லாமல், மிளகு, சீரகம், இஞ்சித் தூள், கறிவேப்பிலை மற்றும் நெய் சேர்த்துச் செய்யப்படுவதால் இதன் மணமும் சுவையும் தனித்துவமாக இருக்கும்.
பாரம்பரியமாக மந்தாரை இலையில் ஊற்றி, குழிவான தட்டுகளில் அல்லது பாத்திரத்தில் வேகவைக்கப்படும் இந்த இட்லி, காரசாரமான மிளகாய்ப் பொதியுடன் (Podi) பரிமாறப்படும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், சுக்கு அல்லது இஞ்சிப் பொடி, மிளகு, கறிவேப்பிலை மற்றும் நெய்.
கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..
நல்லெண்ணெய் மற்றும் நெய்யில் மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து மாவோடு சேர்த்து இட்லித் தட்டுகளில் ஊற்றி அவித்து எடுத்தால் இட்லி ரெடி.

