இந்தியத் திரையுலகில் கவர்ந்திழுக்கும் முகமாகவும், சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் நடிகையுமான ஊர்வசி ரவுடேலா, தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்திற்கு எதிராக விடுத்திருக்கும் லீகல் நோட்டீஸ் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘Bollywood.AI’ மற்றும் ‘Hollywood AI’ ஆகிய நிறுவனங்கள், ஊர்வசியின் அனுமதி பெறாமல் அவரது பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வணிக ரீதியான விளம்பரங்களுக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, அந்நிறுவனத்திற்கு எதிராக ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஊர்வசியின் வழக்கறிஞர் குழு தீவிர சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது குறித்து ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எங்கள் அனுமதியின்றி ஊர்வசியின் அடையாளத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துள்ளனர். உங்கள் பிராண்டை வளர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் தனிநபரின் உரிமைகளை மீறாதீர்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!
இதற்கிடையே, இந்த வழக்குப் குறித்துப் பேசிய AI நிறுவனத்தின் தலைவர் ஷீராஸ் ஹசன், “சினிமா துறையில் AI ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் சினிமா உலகம் இந்த மாற்றத்தை எதிர்ப்பதை நிறுத்த வேண்டும்” எனத் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த காலத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிய ஊர்வசி ரவுடேலா, தற்போது தன் மீதான டிஜிட்டல் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடியிருப்பது திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

