தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மனைவியான சினேகா ரெட்டி, தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் பிரபலமாக வலம் வருகிறார். ராம்சரணின் மனைவி உபாசனா காமினேனிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது இந்திய அளவில் டிரெண்டான நிலையில், சினேகா ரெட்டியின் சாதனைகளும் அவரது பன்முக ஆளுமையும் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
ஒரு பிரபல நட்சத்திரத்தின் மனைவியாகத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் பல துறைகளில் முத்திரை பதித்து வருபவர் சினேகா. குறிப்பாக, குழந்தைகளுக்கான சிறப்புப் புகைப்படக் கலையை மையமாகக் கொண்ட ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோவை வெற்றிகரமாக நடத்தி வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.
அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!
ஃபேஷன், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் மகிழ்ச்சியான தருணங்களை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருவதால், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் உத்வேகமாகத் திகழ்கிறார்.
இதற்கிடையே, அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

