தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் முழுமையாக ஐக்கியமாகிவிட்டதால், சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார். இந்த இடைவெளியை நிரப்பும் விதமாக அவரது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான ‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஜேசன் தனது பெயருக்குப் பின்னால் தந்தையின் இன்னிஷியலைத் தவிர்க்க, இருவருக்கும் இடையே மோதல் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
தவெக கூட்டணியில் பாமக ஐக்கியம்.. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி?..
ஆனால், சமீபத்திய பேட்டிகளில் பேசிய ஜேசன் சஞ்சய், “நமக்கு என்ன வேண்டுமோ அதை நாமே முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் அப்பாவின் அட்வைஸ்” என்று தெளிவுபடுத்தினார். பக்குவமான அவரது பேச்சைக் கண்ட விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்காக நடிகர் சூரியை பேட்டியெடுத்த பிரபல தொகுப்பாளினி டிடி, ஜேசன் சஞ்சய் குறித்துப் பேசுகையில், “ஜேசன் ரொம்ப திறமையான பையன். அவருக்கு நல்ல குணம். அருமையாக வளர்த்திருக்கிறார்கள். அவரைப் பார்க்கும்போது இந்தத் தம்பி ரொம்ப நல்லா வரணும் எனத் தோன்றுகிறது” என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

