சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் நவீன சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.
இதற்காக சுமார் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. “ஏற்கனவே தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும், லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் சுமையிலும் இயங்கி வரும் சூழலில், ரூ.1,200 கோடி செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவது எந்த வகையிலும் அவசியமற்றது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கண்டித்துள்ளார்.
வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!
மேலும், தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் போது, இந்த ஆடம்பரத் திட்டம் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த காலங்களிலும் (திமுக ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதும், பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அது பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டதும்) இது போன்ற தலைமைச் செயலக விவகாரங்கள் அரசியல் அரங்கில் தொடர் விவாதப் பொருளாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பட்டினப்பாக்கத்தில் புதிய வளாகம் அமைப்பதற்கான நகர்வுகள் அரசியல் கட்சிகளிடையே அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

