கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு (சுமார் 31 குடும்பங்கள்) அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, முறையான போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசுப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணை நடந்துவரும் சூழலில் இந்த அரசாணை வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பிராய்லர் கோழி விற்பனை காலவரையின்றி நிறுத்தம்.. வியாபாரிகள் சங்கம் எடுத்த முடிவு..!
முன்னதாக, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட வாதங்களை ஏற்று, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வழங்கிய பணி நியமன ஆணைகள் செல்லாது என நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

