நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் டூ ஹீரோ.. அடுத்த அதிரடிக்குத் தயாரா?.. ஜேசன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் வீடியோ..!

இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வீடியோ வெளியிட்ட கெனிஷா ரவி மோகனை விட்டு பிரிவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார். இசை என்பது உணர்வுகளை வெளிப்படுத்தவும், மக்களை இணைக்கவும் நேர்மறை ஆற்றலை பரப்பவும் உதவும் சற்று வாய்ந்த ஊடகம். மனதை தொடும் பாடல்களை உருவாக்கும் ஆர்வம் கொண்ட அவர் வெவ்வேறு மொழிகளிலும் துறைகளிலும் புதிய படைப்பு வாய்ப்புகளை ஆர்வத்துடன் ஏற்று வருகிறார்.
இந்நிலையில், மலையாள திரை உலகில் கெனிஷாவின் அறிமுகத்தால் தொடங்கும் இந்த பாடல் புதிய அத்தியாயத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். படைப்பாற்றல், துணிவு மற்றும் இசை இந்நிலையான சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த பயணம் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

