கோவை, ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடந்தது.மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மாணவிகள் விடுதிகளும் 13 மாணவர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட விடுதிகளுக்கு வெள்ளலூரில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் மையத்தில் இருந்து உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூர் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் துணை ஆட்சியருக்கு ஈமெயிலில் புகார் அனுப்பி இருந்தனர்.
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய்.. மோடியை தொடர்ந்து யார் யாரை சந்திக்கிறார்..!
இந்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும் போது : கடந்த பத்து மாதங்களாகவே தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், விடுதி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் தான் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினோம். ஆனால் அங்கு இருந்து தொடர்பு கொண்ட அதிகாரிய ஒருவர், அரசு விடுதிகளில் இப்படித் தான் உணவு வழங்கப்படும் என்றும், பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். தற்பொழுது உணவு வழங்கும் முறை குறித்து மாணவிகள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டு உள்ளதாக கூறி உள்ளனர்.

