புதுச்சேரி கடற்கரையில் சித்தரா பவுர்ணமியையொட்டி நடைபெற்ற 57-வது மகா சமுத்திர ஆரத்தியில் துணைநிலை ஆளுநர் பங்கேற்று ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநில மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் சார்பில் மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் கடல் அன்னையை போற்றும் வகையில் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 57-வது மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி, கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது.
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா விஜய்?.. வைகோ கணிப்பு..!
இந்த விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மகா சமுத்திர ஆரத்தியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், ஆளுநர் அவர்கள் தீப ஆராதனை காட்டி கடல் அன்னையை பயபக்தியுடன் வழிபட்டார்.
சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு ஆரத்தி நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடல் அலைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தீப ஒளியைக் கண்டு தரிசனம் செய்தனர்.

