தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த பரபரப்பான சம்பவம் அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, நேற்று முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சர் வினோத் எழுந்திரித்துப் பேசத் தொடங்கினார்.
அப்போது அவர், முதல்வர் விஜய் குறித்துப் புகழாரம் சூட்டிப் பேசிக் கொண்டிருந்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, ‘பட்ஜெட்டை மட்டும் வாசிக்கச் சொல்லுங்கள்’ என்று கோஷங்களை எழுப்பினர்.
உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!
“உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தியதுடன், அமைச்சர் வினோத்தைப் பார்த்து ‘வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிக்கையை மட்டும் விரிவாகப் படியுங்கள்’ என்று அறிவுறுத்தினார். மேலும் அமளியில் ஈடுபட்டவர்களை அமருமாறு எச்சரித்து அவையைத் தொடர்ந்தார்.”

