Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அரசுக்கு நஷ்டமா?.. சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்..!
    கோவை

    அரசுக்கு நஷ்டமா?.. சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Senthil Balaji reaction to CBI probe on transformer case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். மின்மாற்றி வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றுகள் கொள்முதல் செய்வதில் தவறுகள் நடந்திருக்கிறது என்று ஒரு அமைப்பு புகார் அளித்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இன்று அந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அது குறித்து சில விளக்கங்களை அளிப்பது என்னுடைய கடமை என்று தெரிவித்தார்.

    மின்சார வாரியத்தை பொருத்தவரை மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987 ஆம் ஆண்டு துவங்கி அன்று எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள் தான் தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகிறது என்றார். ஒரு டெண்டர் code செய்யும் போது 20, 30 பேர் அதில் கலந்து கொள்வார்கள் அதில் L1, L2, L3 code செய்வார்கள் அதில் சிலவை ஒரே தொகையாக இருக்கும்.

    பொதுவாக மின்சாரவாரியத்தில் L1 தொகையை யார் மேட்ச் செய்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த டெண்டரை பிரித்துக் கொடுப்பார்கள் என்றும் இதுதான் மின்சார வாரியத்தில் நடைமுறை அதுதான் தற்பொழுது வரை பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    அது தவிற ஸ்கூட்னிங் கமிட்டி, போர்டு கமிட்டி, உள்ளிட்ட மூன்று கமிட்டிகள் சேர்ந்துதான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார். குறிப்பிட்ட அந்த ஒரு அமைப்பு ஏதோ இந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் தவறுகள் நடந்ததை போன்று பிரித்தெடுத்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள் என்று கூறினார்.
    நான் அந்தப் பொறுப்பை பார்த்ததனால் எந்த ஒரு இடத்திலும் அரசு நிர்வாகத்திற்கு தவறு நடக்கவில்லை அரசுக்கு ஒரு நையா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

    சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா? நடக்கவில்லையா என்பதை விசாரணை நடக்கும் பொழுது பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் அதிமுக கூட சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கி உள்ளது என்று தெரிவித்தார். இன்னும் நீதிமன்றத்தில் இருந்து முழு உத்தரவு வரவில்லை என்று குறிப்பிட்ட செந்தில் பாலாஜி இந்த முழு உத்தரவு வந்த பிறகுதான் அதற்குள் என்னென்ன உள்ளது என்பது பற்றி தெரியும் என்றும் கூறினார்.

    மேலும் தான் இதை நெருக்கடியாக பார்க்கவில்லை என்றும் அந்த புகார் அளிக்கக்கூடிய அமைப்பு இந்த நான்கு ஆண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி தவறு நடந்துள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் அதற்கு முன்பு நடந்ததை அவர்கள் மறைத்து அவற்றையெல்லாம் கூறவில்லை என்றும் அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் அந்த அமைப்பினர் கடந்த அரசை பற்றி எதுவும் கூறாமல் எங்கள் அரசின் மீது மட்டும் குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும் தெரிவித்த அவர் எஸ் பி வேலுமணி மீது அந்த அமைப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தாலும் அதனை தொடர்ந்து அவர்கள் எதுவும் பேசவில்லை என்றும் அத்துடன் அதனை முடித்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு தற்பொழுது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் வழக்கறிஞர்கள் உடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று பதில் அளித்தார். மக்கள் மன்றத்தில் தங்களை வீழ்த்த முடியாதவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள் என்றும் அதிமுக மற்றும் பாஜகவினர் வழக்கு தாக்கல் செய்ததை மட்டும் வைத்துக்கொண்டு குற்றவாளி என்பதை போல் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    தற்பொழுது கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்(வானதி சீனிவாசன்) முன்பு தெற்கு தொகுதியில் இருந்தபோது என்னை பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார் என்று கூறிய அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அதன் பின் எங்களைப் பற்றி பேசலாம் என்று தெரிவித்தார்.

    வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பொழுது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தண்டனை வழங்கியதைப் போல பேசுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் அதிக அரசியல் பிரமுகர்கள் மீது வழக்கு உள்ளது என்றும் உதாரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் வழக்கு தொடரப்பட்டது பின்னர் அது என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

    தேர்தலில் வாக்களிக்காதது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் அன்று மூன்று மணிக்கு கிளம்பி சென்று வாக்களிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் கோவையில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு செல்லும் பொழுதும் அதிமுகவினர் பூத்துக்கு உள்ளேயே இருந்தார்கள் ஏஜென்ட் ஆக இல்லாதவர்களும் அங்கு இருந்தார்கள் என்றும் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் ஈடுபட்டதாகவும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் தேர்தல் முடியும் கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் இருந்த காரணத்தினால்தான் நான் அங்கு சென்று வாக்களிக்க இயலவில்லை என்று தெரிவித்தார்.

    பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முழுமையாக இங்கு இருந்தேன் என்று தெரிவித்தார். அங்கு சென்ற பின் ஒரு பதற்றம் ஏற்பட வேண்டுமா என்பதை நான் தான் முடிவு எடுக்க வேண்டும் அது என்னுடைய உரிமை என்று தெரிவித்த அவர் வாக்களிப்பதும் கடமை நான் போட்டியிடும் தொகுதியில் பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதும் என்னுடைய கடமை அப்படி இருக்கும் பொழுது நான் கிளம்பும் பொழுது பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என்று தெரிவித்தார்.

    கோவை தெற்கு தொகுதியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தது அவர்கள் உங்களுடன் இருந்த புகைப்படங்களை வலைதளங்களில் வைத்திருந்தது தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எல்லாம் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

    தேர்தலில் போட்டியிடுவது என்பது அவர் அவர் விருப்பம் என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கூட அவர்கள் இங்கு நின்று இருக்கலாம், கரூரில் நான் போட்டியிடாமல் இங்கு போட்டியிடுவதால் கூட அவர்கள் இங்கு போட்டியிட்டு இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாமே என்று கூறினார். திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் அது போன்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் அவ்வாறு தாக்கல் செய்தால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பு என்பது சிபிஐ விசாரணை பற்றியதுதான் என்றும் அதனை பொருத்தவரை அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை அந்த அமைப்பு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நீதிமன்றத்தில் இது குறித்து உரிய விளக்கங்களை நாங்கள் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

    உறுதியாக தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக முதல்வர் ஆட்சி பொறுப்பில் ஏற்பார் என்றும் கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தோழமை இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.

    தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு தோல்வி பயத்தால் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்றும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள் என்றும் ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லவா என்று தெரிவித்தார்.
    ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அண்மையில் பேசியிருந்தது தொடர்பான கேள்விக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை முன் வைப்பார்கள் நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    எங்களை பொறுத்தவரை வாக்காளர்கள் தங்கள் வெற்றி பெறக் கூடிய வாக்குகளை செலுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பரப்புரையில் செந்தில் பாலாஜியை அடிமை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, கரூரில் நடைபெற்ற ஒரு கூட்டம் என்பது அவர்களுடைய கூட்டம் தான் 41 பேர் இறந்து போனார்கள் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் அப்படி இருக்கும் பொழுது கூட்டத்தை நடத்தியவர்கள் ஓடி விட்டார்கள் நாங்கள் தான் மருத்துவமனைக்கு சென்றோம் பிற கட்சி எனும் வந்தார்கள் அதனை மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    மக்களைப் பற்றி சிந்திக்காத அவர்கள் பற்றியும் அந்த சம்பவத்தில் விட்டு விட்டு ஓடியவர்கள் பற்றியும் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளிலும் 11 எம்எல்ஏ அலுவலகத்தை அமைக்க போகிறோம் என்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இந்த தேர்தல் புதுமையான தேர்தல் என்று பார்க்கவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 45 விழுக்காடுகள் வாக்குகளை பெற்றுள்ளோம் தற்பொழுது அதைவிட கூடுதலாக பெறுவோம், 45 விழுக்காடுகளுக்கு கீழ் நாங்கள் சென்றால் வாக்கு சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம் அப்படி இருக்கும் பொழுது அதற்கு மேல் தான் நாங்கள் செல்வோம் மீதமுள்ள 55 சதவிகிதத்தை யார் பிரித்தால் எங்களுக்கு என்ன அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
    மின்மாற்றி வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    CBI Investigation Coimbatore News Madras High Court Political News senthil balaji TNEB Transformer Case அரசியல் செய்திகள் கோவை செய்திகள் சிபிஐ விசாரணை செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றம் மின்சார வாரியம் மின்மாற்றி வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.