Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஜி.டி. நாயுடுவுக்குப் பெருமை சேர்த்த திமுக: இரண்டாவது முறையும் ஆட்சி உறுதி – கி. வீரமணி கணிப்பு..!
    கோவை

    ஜி.டி. நாயுடுவுக்குப் பெருமை சேர்த்த திமுக: இரண்டாவது முறையும் ஆட்சி உறுதி – கி. வீரமணி கணிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    GD Naidu statue UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை வ.உ.சி மைதானத்தில் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் உருவச்சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஜிடி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தந்தை பெரியாரின் மிக நெருக்கமான நண்பரான ஜி.டி. நாயுடுவின் பெருமையை அங்கீகரிக்கும் வகையில், இந்த அரசு ஜிடி நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்ததாகவும் தற்போது இந்த சிலையையும் திறந்துள்ளதாகவும் இந்த திராவிட மாடல் அரசுக்கும் முதலவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

    தமிழ் அறிஞர்களின் பெருமைகளை உணர்த்தும் இந்த ஆட்சி, வரலாற்று ரீதியாகப் பணியாற்றி வருவதால் மீண்டும் இரண்டாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.நடிகர் விஜய் பாஜக கூட்டணியில் சேருவார் என்று சிலர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது என்று விமர்சித்தார்.

    தனது சொந்தத் திரைப்படத்திற்குப் பிரச்சனை வரும்போது கூட மௌனம் காக்கும் விஜய், திமுகவை மட்டுமே தாக்கி பேசுவதாகவும், பாஜகவைப் பற்றி எவ்வித விமர்சனமும் செய்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மோடி அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய திரிசூல மிரட்டல்களுக்கு அஞ்சி, விஜய் அந்த அரசின் பி-டீம் (B-team) போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.


    ஒன்றிய மோடி அரசு மகளிர் தினப் பரிசாக சிலிண்டர் விலையை உயர்த்தியதுதான் என்றார். மோடி அரசின் வெளியுறவுத்துறை கொள்கை தோல்வியடைந்துள்ளதால் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மத்திய அரசு தவறிவிட்டதாகவும், ஒரு நாடு என்ன வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானிப்பது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தானது என்றார்.

    இறுதியாக, ஜி.டி. நாயுடுவின் பெயரில் உள்ள சாதி அடையாளம் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த கி.வீரமணி, அது சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டியது அல்ல கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பது அவரது பெயரிலேயே இணைந்துவிட்ட ஒன்று என்றும், அப்படி பார்த்தால் ராஜகோபாலாச்சாரியார் அல்லது சங்கராச்சாரியார் என்று அழைப்பதைப் போலவே இதுவும் தவிர்க்க முடியாத ஒரு விதிவிலக்கு என்றும் அவர் கூறினார். எனவே, இதில் விஷமத்தனம் தேடுபவர்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்றார்.

    GD Naidu statue Coimbatore K Veeramani statement MK Stalin inauguration கி வீரமணி பேட்டி கோவை வஉசி மைதானம் மு.க. ஸ்டாலின் திறப்பு ஜி.டி. நாயுடு சிலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.