Browsing: தமிழ்நாடு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் வரை சிக்கித் தவித்து வருவதாகச் சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் அருண்ராஜ் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்ப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.