தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் பல லட்சம் கோடி மதிப்பிலான புதிய சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயண நேரம் மிச்சமாகும் என்றும் இதன் மூலமாகப் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை நவீனப்படுத்துவது மற்றும் புதிய வழித்தடங்களை இணைப்பது தொடர்பான திட்டப் பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் பகிர்ந்துகொண்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
“பழைய போலீசாக இருந்தா ஓடவிட்டு இருப்பேன்”.. காவலரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்..!
இத்திட்டங்களின் கீழ் மாநிலம் முழுவதும் சுமாா் 1,500 கி.மீ தூரத்திற்கு ஆறு வழிச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் (NH), தேசிய விரைவுச் சாலைகள் (NE) மற்றும் அதிவேகப் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்கப்படவுள்ளன. சாலை ஒப்பந்தங்களில் ஊழல்களை ஒழிப்பது மற்றும் திட்டப் பணிகளைத் தரமாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிப்பதற்கான நடவடிக்கைகளைத் துறை வாரியாக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

