இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
போராட்டங்களை நடத்தும் உரிமையை ஒடுக்கும் நோக்கில் கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைத்து சுற்றறிக்கை அனுப்பியது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிதியை முடக்கிய மத்திய அரசு.. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேசம்..!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களின் விவரங்களைக் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சேகரிக்க உத்தரவிட்டதும், அரசு அதனை மென்மையாக அணுகுவதும் வண்டவாளங்களை மறைத்து அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியாக உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

