Author: Prime Reporter
OLA, Uber, Rapido போன்ற தனியார் டாக்சி சேவைகளின் அதிக கட்டணம் மற்றும் ரத்து பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆப் மூலம் நியாயமான கட்டணம், வெளிப்படையான சேவை மற்றும் ஓட்டுநர்–பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப் மூலம், பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் சமநிலை கொண்ட கட்டண முறை அமல்படுத்தப்படும் என்றும், இடைத்தரகர் கமிஷன் குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் கட்டண கட்டுப்பாடற்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஆப், அரசு ஆதரவு பெற்ற டிஜிட்டல் தளமாக செயல்படும். பயணிகள் நேரடியாக ஓட்டுநர்களை தொடர்புகொண்டு சேவையைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையற்ற கமிஷன் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டு ஓட்டுநர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என…
சென்னை பனையூரில் விஜய் காரை தவெக அதிருப்தி நிர்வாகி அஜிதா மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் அஜிதா முற்றுகை என தகவல்
கள்ளக்காலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் காசியாபாத்தில் அக்ஷய் என்பவர் தனது மனைவி ரூபியுடன் வசித்து வந்தார். சில நாட்களில் ரூபி அதே பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயம் கணவருக்கு தெரியாத நிலையில், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அரசல்புரசலாக பேசத் தொடங்கினர். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த கணவன், மனைவி தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சியானார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை கொல்ல கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார் ரூபி. கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அக்ஷயை கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்கவும், உடல்களை எளிதாக அப்புறப்படுத்த, கிரைண்டர் மற்றும் மிக்சியை பயன்படுத்தி, சில உடல்பாகங்களை சிதைத்துள்ளனர். சிறு சிறு பொட்டலமாக உடல் பாகங்களை கட்டி வீசியுள்ளதாக போலீசார்…
சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள மூன்றாம்கட்டளை தளபதி தெருவில் விஜய் என்ற இளைஞர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் மென் பொறியாளராக உள்ளார். சென்னையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் உடன் பணியாற்றிய யுவஸ்ரீ என்ற பெண்ணுடன் காதலில் இருந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்தனர் திருமணம் செய்த கையோடு விஜய் தனது வாடகை வீட்டிற்கு யுவஸ்ரீயை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். இந்த நிலையில் நேற்று இரவு யுவஸ்ரீயின் தங்கை இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்த அவர் கதவை தட்டி பார்த்தார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், குன்றத்தூர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். உடனே விரைந்து வந்த போலுசார், கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். கட்டில் மேல் யுவஸ்ரீ அலங்கோலமாக கிடக்க, தூக்கில் விஜய் தொங்கி சடலமாக கிடந்தார்.…
கோவைக்கு தேர்தல் அறிக்கை குழு இங்குள்ள நிர்வாகிகளிடம் கலந்து பேசி தேதியை முடிவு செய்துவிட்டு நிச்சயம் இங்கு இருக்கக்கூடிய தொழில்துறையினர் விவசாயிகள் என பல்வேறுபட்ட தரப்பினருடைய கருத்துக்களை கேட்டுத்தான் தயார் செய்யப்படும். மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அறிவுரை. எனவே நிச்சயமாக கோவைக்கு வரும்போது அத்தனை தரப்பு மக்களையும் சந்திப்போம். உறுதியாக இங்கு இருக்க கூடிய தொழில் முனைவோரையும் சந்திப்போம் மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையாக உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். எனவே எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது. பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆற்காடு நவாப் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரங்களில் பல பொய்யான விமர்சனங்களை பலர் வைப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது உண்மையான நிலவரம் என்ன என்பது இங்கு…
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை அம்மா அவர்கள் தலைமையில் சிறப்பாக வழிநடத்தி மக்களுக்காக அதிகமான உதவிகளை செய்தார். அதை தொடர்ந்துஎடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் அதிகமான திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். என்றும் கோவையில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பெருமிதம். கோவையில் கட்டுமானம், அமைப்புசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கட்டுமானம், அமைபுசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தொழிற்சங்கத்தின் யூடுயூப் சமூக வலைதள சேனலை துவக்கிவைத்து. இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன், கழக அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் உட்பட…
பிக் பாஸ் சீசன் 9 தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 75 நாட்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தொடர் ஆரம்பத்தில் சற்று சறுக்கலாக இருந்தாலும் போக போக விறுவிறுப்புடன் ஆரம்பமானது. இதில் முக்கிய போட்டியாளராக உள்ள பார்வதி, மற்ற போட்டியாளர்களை வசை பாடுவதும், எதார்த்தமாக திட்டுவது பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பியது. ஆனால் அவர்தான் கன்டென்டே கொடுக்கிறார் என்பதால், 70 நாட்களுக்கு மேலாக தாக்கு பிடித்து வருகிறார். இதனிடையே பார்வதி கம்ருதீன் இடையே லவ் கண்டென்ட் ஓடி வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் இரவில் இருவரும் வெகு நேரம் லைவில் தெரியாதது பல சந்தேகங்களை எழுப்பியது. அதை நம்ப வைக்கும் வகையில், மறுநாள் காலை இருவரும் குசுகுசுவென பேசிய வீடியோக்கள் வெளியானது. அதில், பார்வதி சோர்ந்து போய் தனது அம்மாவிடம் வந்து பேச வேண்டும் என கூறியிருந்தார். கம்ருதினும், கவலைப்படாதே நான் வந்து அம்மாவிடம் பேசுவேன்…
கோவை மாவட்ட, கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மதுக்களை வாங்கிக் கொண்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைவு வாயில் வழியாக வரும் பொது மக்களை போலீசார் சோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர்.அப்போது நுழைவாயில் அருகில் திடீரென்று, ஒரு தம்பதி தலையில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்டு தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றனர். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாய்ந்து சென்று அவர் கையில் வைத்து இருந்த தீப்பெட்டியை போலீசார் பறித்தனர். அப்போது அந்த தம்பதி தங்கள் ஊர் ஆலாந்துறை அருகே உள்ள கீழ கவுண்டன்பாளையம், என்றும் அவர்கள் பெயர் வெங்கடாசலம், நாகமணி என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட முயற்சிக்கும் போது…
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்காகவும், சுதந்திர போராட்டத்திற்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள் ஆனால் முதல்முறையாக இந்துக்கள், முருக பக்தர்கள் தங்களது கோரிக்கைக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிப்பதாக கூறினார். த.வெ.க தலைவர் விஜய் கொங்கு மண்டலம் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவிற்கும் த.வெ.க.விற்கு தான் போட்டி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி…
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். தற்போது முன்னணி நடிகராக உள்ள அவர், ஏற்கனவே தனது எஸ்கே ப்ரொடக்சன் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட படங்கள் தரமான படங்களாக அமைந்தன. கடைசியாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். Our journey is built on stories.And defined by the voices behind them.Across our films, we’ve had the privilege of introducing new filmmakers -who found their first steps, their first frames & their first journeys with us.A new chapter unfolds soon -…
