Author: Prime Reporter
பெருந்தலைவர் காமராஜர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு youtuber முக்தார் இழிவாக பேசியதை கண்டித்து பல்வேறு நாடார் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். கோவையில் தொழில் முனைவர் பாதுகாப்பு சங்கம், இந்து நாடார் சேவைகள் சங்கம் மற்றும் கோவை மாநகர் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி அன்று Youtuber முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தற்பொழுது வரை அவர் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு விசாரணை கூட தொடங்கவில்லை என்று மனிதர்கள் குற்றம் சாட்டினர். Youtuber முக்தார் நடவடிக்கை எடுக்க விட்டல் தமிழகம் முழுதும் உள்ள 50 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகர்கள் அரசுக்கு…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றியுள்ளனர். எந்த பார்ப்பனராவது ‘முருகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களா? அவர்கள் முருகனை ‘ஸ்கந்தன்’ என்றே அழைக்கின்றனர். ‘கந்தன்’ என்றாலும் அது தமிழ் பெயராகிவிடும் என்பதால் ‘ஸ்கந்தன்’ என்றுதான் பயன்படுத்துகின்றனர். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிராமண சமூகத்தைச் சேர்ந்த தனது கணவர் பெயர் ‘குமார்’ என்றும், தனது மகன் பெயர் ‘கார்த்திகேயன்’ என்றும் குறிப்பிட்டு, அவை அனைத்தும் முருகன் பெயர்களே என பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த கல்லூரி மாணவி ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்த காவலர் பணியிடை நீக்கம்.கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமத். இவர் பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று விட்டு கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் வந்து வந்தார். இவரது அருகே சென்னையில் சட்ட கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி கோவைக்கு வந்தார். அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அருகே அமர்ந்து இருந்த காவலர் சேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவரை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கி விட்டு விசாரணை நடத்தினர்.…
கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் கைது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கோவை ஆர்எஸ் புரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது
2026 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட பாஜக கோரிக்கை வைத்த நிலையில் 23 தொகுதிகளை ஒதுக்க இபிஎஸ் முடிவு என தகவல்
கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், ‘கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது’ என கூறி, கருப்பு துணிகளால் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்தால், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, சமூக…
ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, ரெயில்வே ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 20ஆம் தேதி தாம்பரத்தில் கடற்கரை நோக்கிச் புறநகர் ரெயில் சென்றது. அப்போது ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் உடனடியாக செயல்பட்டு பாதுகாப்பாக காப்பாற்றினார். Swift alertness by Shri Nithish Kumar, Ticket Checking Staff (CCTC/TBM), at Tambaram on 20.12.2025, saved a lady passenger who accidentally slipped while boarding a Beach-bound train. His timely action and presence of mind averted a serious accident, reflecting exemplary… pic.twitter.com/qRhNsgLcrA— Southern Railway (@GMSRailway) December 22, 2025 அவரது துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் அவரது…
கோவை மாவட்டம் மருதமலை மலைப்பகுதியில் 184 அடி உயரமுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்த இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மருதமலை முருகன் கோவில் மற்றும் சுற்றுப்புற சூழல் தொடர்பான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மருதமலை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதி என்றும், இங்கு பெரிய அளவிலான சிலை அமைப்பது இயற்கை சமநிலையை பாதிக்கும் என்றும், வன உயிரினங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறி, சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை அமைப்பதற்கு முன் அனைத்து சட்டபூர்வ அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மேற்கொள்ளப்பட்டுள்ளதா, மலைப்பகுதி பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தது. மேலும்,…
தமிழ் சினிமாவை விஜயகாந்த் இல்லாமல் தவிர்த்து விட முடியாது. உதவி கேட்டு வந்தவர்களுக்கு உள்ளங்கையில் வைத்து பார்த்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தது தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நடிகர்கள் வளர வேண்டும் என்பதற்காக அவர்களது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தியவர். சம்பளம் கூட வாங்காமல் பல படங்களில் கெஸ்ட் ரோலில் பணியாற்றியுள்ளார். விஜய், சூர்யா என பல நட்சத்திரங்கள் சினிமாவில் உயர வர வேண்டும் என படத்தில் நடித்து உதவி செய்தவர். இப்படி பல உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் போல இருக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசும் போது, அரசியலுக்கு நடிகர்கள் வருவது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். ஆனால் நடிகர்கள்…
திருப்பூர் – அனுப்பர்பாளையத்தில் நூற்றுக்கணக்கான பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபநாட்களாக பாத்திரப் பட்டறைக்குள் மற்றும் அதுதொடர்பான தொழிற்சாலைக்குள் கும்பலாக வரும் சில பெண்கள் அங்குள்ளவர்களுடன் தண்ணீர் கேட்பது போல அடாவடியாக நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை திருடி சென்று விடுகின்றனர். இதே போல சில பாத்திரப் பட்டறைகளில் ஆளில்லாத நேரமாக அங்கு சென்று பொருட்களை திருடி சென்று விடுகின்றனர். இந்த அடாவடி திருட்டு சம்பவங்கள் காரணமாக பாத்திர பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்பெண்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்டிகளுடன் 15வேலம்பாளையம் போலீசில் புகாரளித்துள்ள பாத்திரப்பட்டறை உரிமையாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
