Author: Prime Reporter
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் இரவு பகலாக தற்பொழுது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்த போராட்டத்தில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணி இடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைந்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கைகள்…
நாங்கள் தீய சக்தி அல்ல, மக்களின் சக்தி, அதைத்தான் நம்புகிறோம் சினிமா வசனம் பேசுகிறார் விஜய், அவருக்கு சிலப்பதிகாரம் என்ன என்பதெல்லாம் தெரியாது
பழம்பெரும் மலையாள நடிகர், எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் (69) உடல்நலக்குறைவால் காலமானார் 50 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வந்த இவர், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக தலைவர் தளபதி விஜய் எஸ்.ஐ.ஆர் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பொருத்தமானதாகவே இருக்கும் என தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு கூறிய “தவெக தவழும் குழந்தை” என்ற கருத்து தொடர்பாக அவர் கூறுகையில், “தவழும் குழந்தைதான் பின்னாளில் பெரியவராக வளர்வார்கள். பெரியவரான பிறகே தன்னாட்சி நடத்துவார்கள். அது வாழ்க்கையில் இயல்பாக எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்” என்றார். மேலும், தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “அது அப்படிப்பட்ட கருத்துதான். களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுதான் தீர்ப்பளிக்கும்” என கூறினார். அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்து, “தலைவரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும்“எங்களைப் பொறுத்தவரை பொங்கல் முடிந்ததற்குப் பிறகு எங்களுடைய திருப்புமுனை எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து நாடே…
கோவை, செட்டிபாளையம் சங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (36) இவர், நடன பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். மேலும் தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் தனது இருசக்கர வாகனத்தில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடன நிகழ்ச்சிகாக சென்று உள்ளார். அப்போது நடன நிகழ்ச்சிக்காக இரவு பள்ளியிலேயே கனகராஜ் மற்றும் அவரது நண்பர் பிரபாகரனும் தங்கி உள்ளனர். காலையில் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து இது தொடர்பாக சுந்தரபுரம் காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சுந்தராபுரம் காவல் துறையின், சம்பவ தொடர்பாக விசாரணை நடத்தினர். அதன்படி அந்த பகுதியில் உள்ள பல்வேறு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.அதில் பழனி அருகே உள்ள மடத்துகுளம் பகுதியில் இருசக்கர…
தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன் என நட்சத்திர பட்டாளமே நடிதது வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஜனநாயகன் படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் முன்பதிவு வசூல் சக்கை போடு போட்டு வருகிறது. வெளிநாட்டில் குறிப்பாக ukவில் நடந்த முன்பதிவில் மட்டும் 1.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் லியோ சாதனையை ஜனநாயகன் படம் முறியடித்துள்ளது. லியோ படம் 10,000 டிக்கெட்டுகளை முன்பதிவில் விற்பனையாகியிருந்தது. ஆனால் ஜனநாயகன், 12,700 டிக்கெட்டுகள் விற்பனையாகி லியோ சாதனையை முறியடித்துள்ளது. மற்ற நாடுகளை சேர்த்தால் இதுவரை 1.5 கோடி ரூபாய் முன்பதிவில் மட்டும் வசூல் செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏழுமலை 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், சித்ரா தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரத்தில் வசித்து வரும் நிலையில், இளைய மகள் (18) மட்டும் தாயுடன் இருந்துள்ளார். இந்நிலையில், சித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன் (31) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி இரவு, வீட்டில் இருந்த தாய் சித்ரா மற்றும் இளைய மகள் மாயமானதாக மூத்த மகள் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சித்ராவின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கேரளாவுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, கேரளாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்ட பகுதியில் சித்ரா, அவரது மகள் மற்றும்…
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து நாளுக்கு நாள் பேச்சுகள் அதிகரித்து வருகிறது. பார்வதி பேய் அறைந்த மாதிரி இருந்தது சக போட்டியாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன் தினம் இரவு பார்வதியும், கம்ருதீனும் சிறிது நேரம் காணாமல் போனது பார்வையாளர்களை சந்தேகிக்க வைத்துள்ளது. மேலும் மறுநாள் காலை, பார்வதியிடம் கம்ரூதின் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்வதும், எங்கம்மா என்ன சொல்லுவாங்கனு தெரியலையே என பார்வதி புலம்பும் போது, கம்ருதீன், நான் அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன் என கூறுவதுமாய் இருந்தது. Ennaba nadanthichu strdy night? Why Dog Barked🤔Kalyanam pannika porangalam!😲#BiggBossTamilSeason9 pic.twitter.com/blvOnGbvsk— Christopher Kanagaraj (@Chrissuccess) December 18, 2025 இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக FREEZE டாஸ்க் நடக்க போகின்றனது. இதில் யாருடைய குடும்பம் முதலில் என்ட்ரி கொடுப்பார்கள் என ஆவலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சான்ட்ரா குடும்பம் உள்ளே வரும் என…
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல; அது ஈகோ பிரச்சனை. இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக…
திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், குப்பையை தரம் பிரித்து கொட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னகாளிபாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து, குப்பை ஏற்றி வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தின் போது சாணிப் பவுடருடன் பங்கேற்ற பெண் ஒருவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களை சமரசப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
