நாளை ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு எதிராக தி.மு.க தீவிரமாகக் குரல் கொடுக்கத் திட்டமிட்டிருந்த சூழலில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் கூட்டத்தொடரை மேலும் பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!
முன்னதாக, நாளை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கைது நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் அவசர முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இருப்பினும், அதற்குள் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற தஞ்சை காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
ஆளுங்கட்சியான தவெக அரசு தனது முதல் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமன்றக் கூட்டத்தொடரை மிகவும் அனல் பறக்கும் களம் ஆக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராகத் தி.மு.க எழுப்பத் திட்டமிட்டிருந்த கேள்விகளுக்கு மத்தியில், இந்த விவகாரமே அவையின் மையப் பேசுபொருளாக மாற வாய்ப்புள்ளது.

