Author: Prime Reporter
நடிகை ரம்பாவின் மகன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரா? தனது மகன் விஜய்யைச் சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ரம்பா.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் புதுச்சேரியில் வரும் 9ஆம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வருகைபுரிந்த வண்ணம் உள்ளனர். இன்று புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று புதுச்சேரி ஓசுது தொகுதியில் எங்கள் NDA வேட்பாளர் திரு இ. தீப்பைந்தன் அவர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ரோட்ஷோவிற்கு கிடைத்த வரவேற்பு, NDA-வின் நோக்கும் தலைமையின்மீதும் மக்களுக்கு உள்ள வலுவான…
இரவு தூங்கும் முன் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நீரேற்றம், இளமைத் தோற்றம் மற்றும் முகப்பரு எதிர்ப்பு உள்ளிட்ட 5 ஆச்சரியமான நன்மைகள் மற்றும் அதன் பயன்பாடுகள்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு நிதியுதவி, ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது. முற்போக்கான சீர்திருத்தத்தை தவறாக சித்தரிப்பது குழப்பத்தை உருவாக்கும். ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள். இந்தி திணிப்பு வாதத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாண்புமிகு திரு தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கள் மிகவும் பொறுப்பற்றதும் அவசரத்தனமானதும் ஆகும்; மேலும், இந்தியாவின் பன்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மரியாதையைப் பற்றிய ஆழமான அலட்சியத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாடு #ThreeLanguagePolicy-யை உறுதியாக நிராகரிக்கிறது. இது மொழிகளை எதிர்ப்பது குறித்து அல்ல; திணிப்பை எதிர்த்து அரசியலமைப்புச் உரிமைகளை பாதுகாப்பது குறித்ததாகும். பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்து நீங்கள் முன்பு தெரிவித்த அவமதிப்பான கருத்துகளும், பின்னர் தாமதமாக…
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் விடியா திமுக அரசின் திறனற்ற மற்றும் ஊழல் நிரம்பிய ஆட்சியால் தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மோசமான பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதேபோல், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து, ஒருகாலத்தில் அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாடு இன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறிவிட்டது என்பதை வெளிக்கொணரும் விதமாக The Mirage of Zero Tolerance என்ற பெயரில் கருப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை, மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் திரு. பியூஷ் கோயல் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த…
மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டையில் நாவரிப்பு இல்லாமல் சுவையான தொக்கு செய்வது எப்படி? சீக்ரெட் ரெசிபி மற்றும் அதன் செய்முறை விளக்கம்.
நடிகரான விஜய் தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில், விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம், புதுச்சேரி என மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், இதுவரை எந்த ஊடகத்துக்கு பேட்டி கொடுத்ததில்லை. ஏன் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான போதும் கூட விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார். அவர் எப்போது பேட்டி கொடுப்பார் என ஊடகங்கள் காத்திருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அவர் பிரபல தொலைக்காட்சியில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி! ஜீ தொலைக்காட்சியில் வரும் ஏப்.,14 அன்று மக்கள் நாயகன் என்ற டைட்டிலோடு…
நாம் அறியாமல் செய்யும் 8 அன்றாடத் தவறுகள் எப்படி நம்மை விரைவாக முதுமையை நோக்கித் தள்ளுகின்றன? ஆரோக்கியமான மாற்றங்கள் மூலம் இளமையைத் தக்கவைப்பதற்கான வழிகள்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்ளை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,திரு ஸ்டாலின் அவர்களுக்கு, மத்திய அரசின் நோக்கங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத விஷயங்களைக் குறித்து கூட குறை கூறுவது ஒரு பழக்கமாகி விட்டது. 2026–27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ (இரண்டாம் நிலைப் பள்ளி பாடத்திட்டம் – பகுதி 1) படி, 2026–27 கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டும் இந்தியாவைச் சேர்ந்த மொழிகளாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வழங்கப்படும் மொழிகளை விளக்குவதற்காக, இந்திய அரசியலமைப்பின் 8ஆம் அட்டவணையில் பட்டியலிடப்பட்ட அனைத்து அட்டவணை மொழிகளும், அதோடு பிற இந்திய பிராந்திய மொழிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின்…
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ், அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற மறுத்ததால் மாடிக்கு ஊர்ந்து சென்ற அவலம்.
