முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்தது நேற்று தமிழக நியமித்து நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இவரது இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் விமர்சனங்களை சட்டமன்றத்திலும் முன் வைத்தன.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினர் உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் சாடி இருந்தார். இந்த நிலையில், ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு தற்போது, வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து, விஜயின் செயல்பாட்டை பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் – 13.05.2026#tnassemblyelection2026#tngovt#dmdkofficial #premamalathavijayakanth pic.twitter.com/Fi01YDSZ3r
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) May 13, 2026

