தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியுள்ள படம் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’. நடிகர் விஜய்யின் மகனாக திரைத்துறைக்கு வந்தாலும், தந்தையின் சிபாரிசு இல்லாமல் தனது சொந்த முயற்சியால் லைகா தயாரிப்பில் இப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா ஹீரோயினாக நடித்துள்ளார்.
நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ஜேசன் சஞ்சயின் மேக்கிங் ஸ்டைல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும், கமலா தியேட்டரில் சங்கீதா தனது மகள் திவ்யா சாஷாவுடன் படம் பார்க்க வந்ததும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதற்கிடையே, விஜே சித்து நடத்திய ‘மொட்டை மாடி பார்ட்டி’ நேர்காணலில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது கல்லூரி காலத்தில் தான் காதலித்தது குறித்தும், ஒன்றரை வருட காதலுக்குப் பிறகு இருவரும் பேசிப் பிரிந்துவிட்டோம் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார்.
பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!
காதல் தோல்வியால் சோர்ந்துபோன அந்தக் காலகட்டத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் சோகப் பாடல்கள்தான் தனக்குத் துணையாக இருந்தன என்றும், அந்தத் தருணங்களை ஒரு பாடமாகக் கடந்து வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

