சளி, இருமல், நெஞ்சு சளி தொல்லையா? அப்போ இந்த ஸ்பெஷல் ‘புதினா வெற்றிலை ரசம்’ வச்சு குடிச்சு பாருங்க, நிமிஷத்துல பறந்து போயிடும். வெற்றிலையும் புதினாவும் சேர்ந்தா மருத்துவக் குணம் பல மடங்கு அதிகம். செரிமானத்தை அதிகரிச்சு, தொண்டை கட்டை உடனே சரி பண்ணும். மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொதிக்க வச்சீங்கன்னா, அடி தூள் டேஸ்ட்ல மணக்குங்க ரசம்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை – 3 (நறுக்கியது)
- புதினா இலைகள் – 1 கைப்பிடி
- புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக்கொள்ளவும்)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பூண்டு – 6 முதல் 8 பற்கள் (தட்டியது)
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- நல்லெண்ணெய் அல்லது நெய் – 1 டீஸ்பூன்
- கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
Step 1: முதலில் மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். அதனுடன் புதினா இலைகள் மற்றும் வெற்றிலையைச் சேர்த்து லேசாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
Step 2: ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீருடன், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
Step 3: கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். பின் தட்டிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!
Step 4: தாளித்தவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி தண்ணீரை ஊற்றவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா-வெற்றிலை விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
Step 5: ரசம் லேசாக நுரைத்து வரும் பதத்தில் (அதிகம் கொதிக்க விடக்கூடாது) கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடவும். சுவையான மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த புதினா வெற்றிலை ரசம் தயார்! சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

