Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!
    கோவை

    குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 9, 2026Updated:September 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    lone-wild-elephant-damages-migrant-workers-shed-thudiyalur-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.

    கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை சேதப்படுத்தி அரிசியை தின்று சேதப்படுத்தியது, தொழிலாளர்கள் அலரியடித்து அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.

    கதைக்குத் தேவைப்பட்டால் அப்படி நடிப்பேன்.. ஓப்பனாகப் பேசிய டாப்சி..!

    கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒற்றை யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த அந்த ஒற்றை யானை, அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களைச் சாப்பிட்ட யானை, அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.

    இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு இரண்டு மணி அளவில் அந்த ஒற்றை யானை அங்குள்ள வடமாநில கட்டிடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகைக்குள் புகுந்தது. கொட்டகைக்குள் இருந்த உணவுப் பொருட்களை அது சேதப்படுத்தியதால், அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு அருகில் உள்ள கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். 

    இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதிக்குள் நின்றிருந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.இப்பகுதியில் உள்ள மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம், லட்சுமி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் தினந்தோறும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் இரவு நேரங்களில் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

    இரவு நேரங்களில் லட்சுமி நகர், ரேணுகாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படுவதால், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகின்றனர். மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Coimbatore wild elephant attack shed Coimbatore wild elephant Thudiyalur Forest department drives away elephant 2026 Lone elephant creates panic Coimbatore Thudiyalur Kathirnayakkanpalayam elephant issue கோவை யானை நடமாட்டம் துடியலூர் கதிதிநாயக்கன்பாளையம் காட்டு யானை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.