சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை திரிஷா கலந்துகொண்டார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக சென்னை தலைமைச் செயலகமான கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்.
தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?
சுதந்திர தின விழாவில் பார்வையாளர் பகுதியில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் விழாவைக் காண முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விழாவின் சிறப்பம்சமாக, முதலமைச்சர் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் அமர்ந்திருந்த அதே வரிசையில், அவர்களுக்கு அருகில் நடிகை த்ரிஷா அமர்ந்திருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

