தஞ்சை ஆர்ப்பாட்டப் பேச்சு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசுவதைக் காரணம் காட்டி கைது நடவடிக்கை எடுப்பது இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்று என்று விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர். எஸ். பாரதி, பொது மேடைகளில் அரசியல் பிரமுகர்கள் பேசும் கருத்துக்களை இவ்வளவு பெரிதுபடுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், “த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவரே தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி காலத்தில்கூட அரசியல் மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவதூறு பேச்சுக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை இப்படி அதிரடியாகக் கைது செய்ததில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

