மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்தின் உரிமை சார்ந்த எந்தவொரு விவகாரத்திலும், தமிழக விவசாயிகளின் நலன்களும் பொதுமக்களின் உரிமைகளும் பாதிக்கப்பட தவெக அரசு ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது விவகாரம் தொடர்பாகத் தி.மு.க. தலைமை வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக ஐடி விங் எக்ஸ் (X) தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது ஆக்கப்பூர்வமாகச் செயல்படாதவர்கள், தற்போது அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு..!
மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தமிழகத்தின் நீர் உரிமைகளைக் காப்பதில் அரசு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

