டாஸ்மாக் முறைகேடு வழக்கு மற்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்ததுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும், அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் முகாந்திரம் இருப்பதாகக் கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு 3 மாதத் தடை.. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு..!
உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

