முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) திமுகவிலிருந்து விலகி, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்த ஓ.பி.எஸ்-க்கு இதுவரை எந்தப் பதவிகளையும் திமுக வழங்காததாலும், தேர்தலில் திமுக எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டதாலும் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ்-ன் மகன் ரவீந்திரநாத், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முதல்வர் விஜய்யும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தென்மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இந்த முடிவு உதவும் என தவெக கருதுகிறது.
பெரிய தடாகத்தில் உலா வந்த யானை.. பொதுமக்கள் கவனத்திற்கு..!
ஓ.பி.எஸ் தனது எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார் என்றும், இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் தவெக சார்பில் களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

