தேவையான பொருட்கள்
- சௌசௌ: 1 (தோல் சீவி, நறுக்கியது)
- வேர்க்கடலை: 1/2 கப் (வறுத்தது)
- தேங்காய்: 1/4 கப் (துருவியது)
- பச்சை மிளகாய்: 3 – 4
- பூண்டு: 2 பல்
- புளி: சிறு துண்டு
- உப்பு: தேவையான அளவு
- தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
செய்முறை
Step 1: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய சௌசௌ, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். சௌசௌ மென்மையாகும் வரை வதக்கினால் போதுமானது. வதக்கிய கலவையை நன்றாக ஆறவிடவும்.
Step 2: மிக்ஸி ஜாரில் வதக்கிய சௌசௌ கலவை, வறுத்த வேர்க்கடலை, துருவிய தேங்காய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!
Step 3: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டவும்.

