Close Menu
    What's Hot

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!
    கோவை

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 30, 2026Updated:June 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    diesel-spill-causes-bike-accidents-in-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, ராமநாதபுரம் ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) அருகே இன்று காலை கான்கிரீட் கலவை இயந்திரத்தை (Concrete Mixer) ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து லிட்டர் கணக்கில் டீசல் சாலையில் கொட்டியதால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று காலை ராமநாதபுரம் திருச்சி பிரதான சாலையில், ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எரிபொருள் கசிந்து சாலையில் லிட்டர் கணக்கில் கொட்டத் தொடங்கி உள்ளது.

    ரோடு முழுவதும் டீசல் பரவி எண்ணெய் பசையாக மாறியதை அறியாத பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வண்டியை ‘பிரேக்’ அடித்த போது ‘ஸ்பாட்’டிலேயே நிலைதடுமாறி வழுக்கி விழுந்தனர். இதில் அடுத்தடுத்து வந்த பல இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்ததில், பயணித்த வாகன ஓட்டிகளுக்குக் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    இதனால் அந்தப் பகுதியில் திடீரெனப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.விபத்து நேரிட்டதை உணர்ந்த கான்கிரீட் கலவை நிறுவனத்தின் ஊழியர்கள், உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தினர். மேலும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, போக்குவரத்து போலீஸார் வருவதற்கு முன்பாகவே தாங்களாகவே களத்தில் இறங்கி, சாலையில் மேலும் வாகனங்கள் வழுக்கி விழாமல் தடுக்கவும், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சாலையில் டீசல் கொட்டிய பகுதியில் மண்ணைக் கொட்டி சரி செய்யும் பணிகளும் உடனே மேற்கொள்ளப்பட்டன.அதிர்ஷ்டவசமாகப் பின்னால் பெரிய வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    Bike riders crash Coimbatore Accident Coimbatore news 2026 Coimbatore road accidents Concrete mixer truck Ramanathapuram diesel spill Traffic Disruption இருசக்கர வாகன ஓட்டிகள் கான்கிரீட் கலவை வாகனம் கோவை செய்திகள் 2026 கோவை விபத்து சாலை விபத்து கோவை போக்குவரத்து பாதிப்பு ராமநாதபுரம் டீசல் கசிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 26, 2026

    தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. குட்டி யானை டாப்ஸ்லிப் முகாமிற்கு மாற்றம்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    June 30, 2026

    அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!

    June 29, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026
    Don't Miss

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.