கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்காக, வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிப்பொருட்களை கடித்ததில் காளை மாட்டிற்கு காயம். இது சம்பந்தமாக ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள கரடி மடையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65) இவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவுட்டுக்காய் என்று அழைக்கப்படும் நாட்டு வெடி பொருளை கடித்ததில் அதன் வாயில் பலத்த காயம் அடைந்துள்ளது. பொதுவாகவே கரடிமடை பகுதியில், கால்நடைகள் வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்படும் இடத்தில் தனது காளை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார் பழனிச்சாமி.
மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!
இருந்த போதிலும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ராயன் (70) என்பவர் தனது தோட்டத்தில் எள் பயிரிடப்பட்டிருந்த நிலத்தில், காட்டுப்பன்றிகளை வேட்டையாட வெடிபொருள்களை வைத்திருந்ததாக தெரிய வருகின்றது. பழனிச்சாமி தனது இரண்டு காளைகளை நிலத்தில் மேய்த்து கொண்டிருந்த பொழுது அவற்றில் ஒன்று அந்த வெடிப்பொருளை கடித்ததாகவும் அதனால் அந்த வெடிபொருள் வெடித்து காளைக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராயனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிப்பொருளான அவுட்டுகாய் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இதனை விசாரித்த நீதிபதி ராயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

