கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை எண் 1878 எனும் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் மதுபானம் வாங்கிய நபர் ஒருவர் அந்த பாட்டிலின் உள்ளே ஸ்டிக்கர் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்திடம் அவர் கேள்வி எழுப்பிய பொழுது, உடனடியாக கடையில் இருந்தவர்கள் பாட்டிலை வாங்கிக் கொண்டு வேறு பாட்டில் தருவதாக தெரிவித்துள்ளனர்.
அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!
ஆயினும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் அதனை வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டு, ஒரு விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மதுபான கடையில் இத்தகைய செயல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

